Information and Communication Technology in Education
வணக்கம்!
தோழர்களே வாழ்க்கையில் பிறந்தது முதல் நமது லட்சிய பயணம் தொடங்கி
விடுகிறது ஏன்? எதற்காக பிறந்தோம்? எங்கே செல்லப்போகிறோம்? என்பதில்
தொடங்குகிறது நம் பயணத்திற்கான சிந்தனைப்புள்ளி. நம் பயன எல்லைகளை
அமைத்துக் கொள்வதற்கு நெடிய காலம் ஆனாலும் இந்த இருபத்தியோராம்
நூற்றாண்டில் தகவல்தொழில்நுட்ப அறிவியல் அவற்றையெல்லாம் எளிமையாக்கி
விட்டது.
இதோ ஒரு எளிமையான அரசுப் பள்ளி ஆசிரியன் ஆகிய நான் எனக்கு
தெரிந்த தொழில் நுட்பத்தை நான் தேடித் தெரிந்து கொண்டிருக்கும் உத்திகளை
இதுபோலவே ஆர்வமுள்ள பிறருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கில்
தொடங்கப்பட்டது தான் இந்த ஐசிடி இராம்ஜி தளம்.
இந்த தளத்தில் குறிப்பாக கற்றல் கற்பித்தலில் ஆசிரியர்களின் வேலை
பளுவை குறைத்து அதே சமயத்தில் மாணவர்களிடையே மிக சிறப்பான
தாக்கத்தை ஏற்படுத்தும் தகவல் தொழில்நுட்ப தளங்களையும் வளங்களையும்
அதுசார்ந்த தகவல்களையும் காணொளிகளையும் என் கருத்துக்களோடு சேர்த்து
பதிவிடுவதில் மகிழ்ச்சி!
என்னுடைய நேரங்களும் உழைப்புகளும் இளைய தலைமுறை கற்றலில்
ஆர்வம் உள்ள பிள்ளைகளுக்கு என்றாவது பயன்படும் என்ற நம்பிக்கையுடன்
இராம்ஜி (எ) இராமானுஜம்.க
அரசுப் பள்ளி ஆசிரியர் ,
அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ,
தானிப்பாடி,
செங்கம் கல்வி மாவட்டம்.
Sir shall you share your cell number please....N.Sriram...kumbakonam...cell no:9150655508
ReplyDeletewelcome sir, thuruvanramji0411@gmail.com kindly mail me sir.
Delete