வகுப்பறையில் ஆசிரியர்களுக்கு ஆறு வழிகளில் பயன்படும் இலவச வெப்சைட்
வணக்கம் தோழர்களே!
Waklet.com என்ற தகவல் தொழில்நுட்ப தளமானது முற்றிலுமாக இலவசமாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு தளம் ஆகும்.
குறிப்பாக பள்ளி கல்விக்கு இது மிகவும் பயனுள்ள தளமாக அமைகிறது ஏனெனில் ஏறக்குறைய ஆறு வழிகளில் நாம் இதை சிறப்பாக ஆசிரியர்கள் மாணவர்கள் இடையே பயன்படுத்திக் கொள்ள முடியும்.
1. Teacher curated resources
ஆசிரியர்கள் தங்கள் வளங்களை இங்கே சேமித்து வைக்க முடியும்.
2. Students curated resources
மாணவர்கள் தங்கள் வளங்களை இங்கே சேமித்து வைக்க முடியும்.
3. Digital portfolios
கற்றல் கற்பித்தலுக்கு உதவும் புதிய நிகழ்வுகளை இங்கே பதிவேற்றவும் சேமித்து வைக்கவும் முடியும்.
4. Digital storytelling
நவீன கதை சொல்லும் தளமாக இதைப் பயன்படுத்த முடியும்.
5. Differentiated learning
பல்வேறுபட்ட பரந்துபட்ட கற்றலுக்கு இதை பயன்படுத்த முடியும்.
6. Class and school newsletter
தகவல்களை ஆசிரியர்கள் மாணவர்களிடையே பரிமாறிக்கொள்ள உதவும்.
மேற்கண்ட வகைகளில் இந்த தளத்தை ஆசிரியர்கள் மாணவர்கள் இருவருமே கற்பித்தலுக்கு சிறப்பாக பயன்படுத்த முடியும். இதிலே அனைத்து டிசைன்களும் ஏற்கனவே வடிவமைக்கப்பட்டுள்ளன நாம் நமக்கு ஏற்ற வடிவத்தை தேர்ந்தெடுத்து நம்முடைய கல்விசார்ந்த விஷயங்களை டாக்குமென்ட்களை பிடிஎப் பைல்களை வீடியோக்களை மற்ற கற்றல் தளத்தின் இணைய லிங்குகளை இங்கே நாம் பதிவேற்றி நம் மாணவர்களுக்கு பகிர முடியும்.
மேலும் தேவையான போது இதை தேவையான வகையில் மாற்றிக் கொள்ளவும் முடியும்.
இதுதொடர்பான மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள இந்த தளத்தை எவ்வாறு பயன்படுத்துவது எனவும் தெரிந்து கொள்ள இந்த வீடியோவை காணவும்.
Click here to visit : ICT WAKELET || FREE SITE CREATION FOR TEACHING
Click here to go wakelet websitewakelet.com
Comments
Post a Comment
Thanks for the visit!