Excellent smart class within 35000 Rs.

வணக்கம் தோழர்களே!
     நம் பொருளாதார வசதியைப் பொறுத்து குறைந்தது ஒரு லட்சம் முதல் அதிகபட்சம் 7 லட்சம் வரை ஒரு ஸ்மார்ட் கிளாஸ் பள்ளிகளில் உருவாக்க தேவைப்படுகிறது. ஆனால் இவ்வளவு செலவு செய்யாமலேயே வெறும் 35 ஆயிரத்திற்கு உள்ளாக நாம் பிரமிக்கத்தக்க வகையில் smart class உருவாக்கிவிட முடியும்.
  இந்த ஸ்மார்ட் கிளாஸ் ஆனது முற்றிலும் ப்ரொஜெக்டர் மூலமாக இயங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. நாம் நமது கணினியையோ கைபேசியையோ இந்த ப்ரொஜெக்டர் உடன் இணைத்து விட்டால் அதிலிருந்து சுவற்றில் விழும் ஒளியானது தொடுதிரை ஆக அதாவது interactive smart screen ஆக மாறிவிடுகிறது. நாம் இதை நம் விரல்களைக் கொண்டோ அல்லது அதற்கென விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட் தொடு கோல் smart touch stick கொண்டோ ஒரு விலை உயர்ந்த ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் இங்கே நாம் செய்து காட்ட முடியும்.
 இப்பொழுதெல்லாம் பெரும்பாலான ஆசிரியர்கள் தங்கள் சொந்த பணத்தை மாணவர்களின் கல்விி வளர்ச்சிக்காக மனமுவந்து செலவிட்டு வருகின்றனர். நகையை அடகுு வைத்து படிக்க வைப்பவர், பெற்றோர் இல்லாத பிள்ளைகளை தானே  படிக்க வைப்பவர், மாதச் சம்பளத்தில் ஒரு பாதியை மாணவர்களுக்காகவே ஒதுக்குபவர் என ஏராளம் ஏராளம் உண்டு. அதுபோன்ற ஆசிரியர்களுக்கு இந்தப் பதிவு ஒரு உதவியாக இருக்கும் என நம்புகிறேன். மேலும் நாம் படித்த பள்ளிக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கும் நபர்கள் இருந்தால் இந்த சேவையைை உங்கள்  பள்ளிக்கு செய்து கொடுங்கள் இந்த உதவி வருங்கால தலைமுறை பிள்ளைகளுக்கு பேருதவியாக இருக்கும்.
 இந்த ஸ்மார்ட் வகுப்பறையை பற்றி மேலும் தெரிந்து கொள்ள click here to visit : 82 inch finger touch screen interactive whiteboard with projector.
.
இராம்ஜி.
அரசுப் பள்ளி ஆசிரியர்
தானிப்பாடி.
.
உங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

Comments