ICT_HOW TO DO VOICE TYPING IN ALL LANGUAGES
வணக்கம் தோழர்களே!
முன்பெல்லாம் கைகளால் டைப் செய்து அதைப் பிரதி எடுத்துப் பார்ப்பது என்பது
அபூர்வமான ஒன்றாக இருந்தது கைகளால் எழுதிய காலம் மாறி டைப் செய்து
பிரிண்ட் எடுத்து பார்க்கும் காலம் வந்தது ஆனால் டைப் செய்ய எடுத்துக்கொள்ளும்
காலம் அதிகமாக உள்ளது அதற்காக டைப்பிங் கிளாஸ் சென்று கற்றுக்கொள்ள
வேண்டிய அவசியமும் இருந்து வருகிறது அதிலே வேகமாக டைப் செய்ய ஹையர்
கிளாஸ் என்றும் மிதமான வேகத்தில் டைப் செய்ய லோயர் கிளாஸ் என்றும்
தனித்தனியே இருந்து வந்தது ஆனால் இதை எல்லாம் மாற்ற
இப்பொழுது வாய்ஸ் டைப்பிங் என்ற நவீன தகவல் தொழில்நுட்பம் வந்துவிட்டது.
முதன் முதலில் ஒரு சில உலக மொழிகளில் மட்டும் இருந்து வந்த இந்த
வாய்ஸ் டைப்பிங் தற்பொழுது உலகின் பெரும்பாலான அனைத்து மொழிகளிலும்
வந்துவிட்டது முதலில் மொபைல் போன்களில் தனியார் அப்ளிகேஷன்கள் மூலம்
வாய்ஸ் டைப்பிங் என்பது அறிமுகப்படுத்தப்பட்டது இலவச சேவையாக ஒரு
விஷயத்தையோ பொருளையோ தேடுவதற்கு கூகுள் வாய்ஸ் டைப்பிங் அறிமுகம்
செய்யப்பட்டது இதுதான் வாய்ஸ் டைப்பிங் என் அடுத்த கட்டத்திற்கு நம்மை
அழைத்துச் சென்றது என்றே கூறலாம் இந்த கூகுள் வாய்ஸ் டைப்பிங்ல் நாம்
விரும்பும் மொழியை தேர்ந்தெடுத்து அந்த மொழியில் நாம் பேசினால் அது
எழுத்துக்களாக அதாவது மெசேஜாக உருவாகும் ஆனால் நமக்கு அந்த மொழி பேச
தெரிந்திருக்க வேண்டும்.
நம்முடைய கல்வித் துறையில் இந்த வாய்ஸ் டைப்பிங் எவ்வாறெல்லாம்
பயன்படுத்தலாம் என்றால் நாம் மாணவர்களுக்கு ஒரு கருத்தை பகிரவும்
கேள்வித்தாள்களை உருவாக்குவோம் பதில்களை எழுதி போடவோ தேவை
வேண்டி இருக்கும் இடத்தில் நாம் இவ்வாறு வாய்ஸ் டைப்பிங் செய்து பல
மணி நேரம் ஆகும் செலவை சில நிமிடங்களுக்குள்ளாகவே பேசி டைப் செய்து
அதை மாணவர்களிடத்தில் மொபைல் மூலமாக பகிரலாம் அல்லது
ஹைடெக் பிராஜக்டர் ஸ்கிரீன் மூலமாக பகிரலாம் மாணவர்கள் அதை
பயன்படுத்திக் கொள்வார்கள்.
சரி இதை கணினி அல்லது லேப்டாப் இந்த வசதியை பயன்படுத்த முடியுமா
என்றால் கட்டாயம் முடியும் நீங்கள் பயன்படுத்தும் எந்த ஒரு பிரச்சனையும்
ஓபன் செய்து கூகுள் பக்கத்திற்கு வந்தால் அங்கே 9 புள்ளிகள் கொண்ட கூகுள்
ஐகான்ஸ் இருக்கும் அதை நீங்கள் கிளிக் செய்தால் அதில் ஒரு ஐகான் டாக்ஸ்
என்று இருக்கும் (DOCS) அந்த நீங்க உங்களுக்கு கூகுள் டாக்ஸ் என்ற
இந்தப் படங்களில் காட்டியுள்ளவாறு ஓபன் ஆகும்.
அங்கே நீங்கள் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி அங்கே குறிப்பிடப்பட்டுள்ள
அனைத்து மொழிகளிலும் வாய்ஸ் டைப்பிங் செய்யலாம் .
முதலில் டூல்ஸ்(TOOLS) என்ற ஐகானை கிளிக் செய்யவும் அதில் வாய்ஸ் டைப்பிங் (VOICE TYPING) என்பதை கிளிக் செய்யவும் வாய்ஸ் டைப்பிங்கை கிளிக் செய்தவுடன் உங்களுக்கு தனியாக ஒரு பாப் அப் ஐகான் தோன்றும் அதில் மைக் சிம்பல்(MIC) இருக்கும் அந்த ஐகானில் மேலே லாங்குவேஜ் செலக்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான மொழியைத் தேர்ந்தெடுத்து விட்டு பின்பு மைக் சிம்பல் ஐ கிளிக் செய்தால் அது ஆரஞ்சு கலரில் மாறும் .
அப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுத்த மொழியில் பேசினால் அது எழுத்துக்களாக
அங்கே பதிவு பெறும் இதை பயன்படுத்தி உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி
இன்னும் நிறைய சேவைகளை மாணவர்களுக்காக செய்ய எனது வாழ்த்துகள்
இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து
தெரிந்து கொள்ளவும் நன்றி.
CLICK HERE TO WATCH THE VIDEO:
THANKS WITH RAMJI.




great work, congratulation sir.
ReplyDeleteTHANKS FOR YOUR VALUABLE FEED BACK MR.NAGULAN VENKATESAN JI.
Delete