ஆங்கில பாடத்திற்கான ICT GAMES TO LEARN
வணக்கம்
தோழர்களே ஒவ்வொரு பாடத்திற்கும் அதற்கான நவீன தகவல் தொழில்நுட்ப கற்றல் தளங்கள் (ICT) நிறைய உள்ளன. நாம் ஆங்கிலப் பாடம் கற்றுக் கொள்வதற்கும் கற்பிப்பதற்கும் மிகச்சிறந்த விளையாட்டுகள் மூலம் கற்றுக்கொள்ளும் ஒரு வலைதளத்தைப்பற்றி இங்கே பார்க்கலாம். அந்த வலைத்தளத்தின் பெயர் games to learn English என்பதாகும்.
இந்த வலைத்தளம் குறிப்பாக ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் உள்ளது. இந்த வலைத்தளத்தில் ஆங்கிலம் தொடர்பான spelling game, tense learning, phrasal verbs, missing words, missing letters, phonetics games, vocabulary games, colour games, number games, spoken games, matching games, building games இதுபோன்று இன்னும் நிறைய வகையான விளையாட்டுகள் இலவசமாக உள்ளன. இதை நீங்கள் ஆன்லைனிலேயே விளையாடலாம்.
விளையாட்டு மூலம் கற்பதால் மாணவர்களின் மனதில் ஆழமாகப் பதியும் அதுமட்டுமில்லாமல் ஆர்வம் அதிகரிப்பதால் மீண்டும் மீண்டும் விளையாடி சீக்கிரமாக அடுத்த லெவல் சென்று விரைவாக கற்றுக் கொள்வதற்கும் ஒரு வாய்ப்பாக அமைவது இதன் தனிச்சிறப்பு ஆகும்.
Click here to know more about
.
Click here to visit
Comments
Post a Comment
Thanks for the visit!