ICT GOOGLE PODCAST _கூகுளின் கதை சொல்லி


வணக்கம் தோழர்களே!
இன்றைய ஐசிடி தகவல் பகுதியில் Google podcast என்ற கூகுளின் கதைசொல்லி என்ற ஒரு அப்ளிகேஷனை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த நவீன யுகத்தில் நமக்கு நிறைய வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதற்கான நேரம் பெரும்பாலும் இருப்பதில்லை அவ்வாறு இருக்கையில் நீங்கள் இந்த கூகுள் பாட்காஸ்ட் என்ற இந்த இலவச அப்ளிகேஷனை பயன்படுத்தி கொள்ளலாம்.
இது முதன்முதலாக ஜூன் 18 2018 அன்று கூகுளால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு இலவச சேவையாகும். இதில் லட்சக்கணக்கான நாவல்கள் புதினங்கள் வரலாற்று கதைகள் குழந்தைகளுக்கான கதைகள் நீதிக்கதைகள் பல்வேறு நிகழ்வுகள் ஆகியவை குரல் வடிவில் பதிவேற்ற பட்டுள்ளன இதில் பல்வேறு மொழிகளில் இந்த வசதிகள் கிடைக்கின்றன என்பது சிறப்பம்சம்.
நீங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் போன் பயன்படுத்தினால் நேரடியாக பிளே ஸ்டோர் சென்று அங்கிருந்து கூகுள் பாட்காஸ்ட் என்று டைப் செய்து இதை டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.குறிப்பாக தமிழில் பொன்னியின் செல்வன் போன்ற மாபெரும் வரலாற்று காவியங்கள் எல்லாம் இங்கே குரல் வடிவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது வரவேற்புக்குரிய விஷயமாகும்.பொன்னியின் செல்வன் கதையை எல்லாம் தொடர்ந்து படித்தாலே ஆறு மாத காலம் ஆகும் ஏறக்குறைய ஆறு பாகங்கள் உள்ளன ஆனால் அவற்றை குரல் வடிவில்  கூகுள் பாட்காஸ்ட் மூலமாக நீங்கள் கேட்கின்ற பொழுது ஏறக்குறைய இரண்டு மாதத்திற்குள்ளாகவே பொன்னியின் செல்வனை நீங்கள் கேட்டு முடித்துவிடலாம். கல்வித்துறையில் இதை ஆசிரியர்களும் மாணவர்களும் தாராளமாக பயன்படுத்தலாம் தங்களுடைய நேரங்களை இது போன்ற பயனுள்ள வழியில் செலவிடலாம். ஓய்வான நேரங்களிலும் இரவு நேரங்களிலும் நீங்கள் பாடல் கேட்பது போல் இந்த கதைகளை கேட்டு விடலாம்.நீங்கள் பணம் செலவழித்து வாங்கிப் படித்து தெரிந்து கொள்ளும் மிகப்பெரும் வரலாற்று கதைகளை இதில் நீங்கள் இலவசமாக தெரிந்து கொள்ளலாம். இந்த வசதியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து வீடியோ வடிவிலும் தெரிந்து கொள்ளவும் நன்றி.click here to know more about Google podcast

Comments