ICT- WHATSAPP WEB மூலம் மொபைலை கணினியுடன் கனெக்ட் செய்வது எப்படி?
வணக்கம் தோழர்களே!
தற்பொழுது உள்ள தகவல் தொழில்நுட்பம் மூலம் நம் கைப்பேசியை கணினி மற்றும் லேப்டாப்புடன் பல்வேறு வழிகளில் கனெக்ட் செய்துகொள்ள முடியும்.
அந்த வகைகளில் இந்த வாட்ஸ்ஆப் வெப் என்பது வாட்ஸ் அப் செயலியில் உள்ளேயே இருக்கும் ஒரு இன்பில்ட் வசதியாகும்.
How to connect through WhatsApp web?!
வாட்ஸ்அப் வெப் மூலமாக எவ்வாறு கனெக்ட் செய்வது என பார்ப்போம்.
முதலில் நீங்கள் கனெக்ட் செய்ய வேண்டிய கணினியில் அல்லது லேப்டாப்பில் நீங்கள் பயன்படுத்தி வரும் பிரவுசர் ஐ ஓபன் செய்து அங்கே கூகுள் பக்கத்தில் WhatsApp web என டைப் செய்து என்டர் கொடுக்கவும்.
அவ்வாறு செய்தவுடன் நீங்கள் நேரடியாக முதல் படத்தில் காட்டியுள்ளவாறு கியூ ஆர் கோடு உள்ள பகுதிக்கு செல்வீர்கள்.
பிறகு உங்கள் மொபைலை எடுத்து அதில் உள்ள வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்து அதில் மேலே உள்ள மூன்று புள்ளி ஐகான் பகுதியை படத்தில் காட்டியுள்ளவாறு தொட்டால் அதில் வரும் மூன்றாவது ஆப்ஷன் WhatsApp web என காட்டும். அதை கிளிக் செய்தால் ஒரு QR scan பகுதி வரும்.
அந்த க்யூ ஆர் ஸ்கேனர் பகுதி மூலம் ஏற்கனவே கணினி திரையில் ஜெனரேட் ஆகி இருக்கும் QR code ஐ சரியாக ஸ்கேன் செய்யவும் அவ்வாறு செய்தால் சில வினாடிகளில் உங்கள் மொபைல் வாட்ஸ்அப் திரை கணினியில் தோன்றும் இப்பொழுது உங்கள் மொபைல் கணினி உடன் இணைந்து விட்டது.
இந்த சேவையை நீங்கள் பயன்படுத்த கட்டாயம் உங்கள் மொபைல் நெட் பேக் டேட்டாவை wi-fi or hotspot மூலம் உங்கள் கணினியுடன் இணைத்து இருக்க வேண்டும். உங்கள் மொபைல் நெட் டேட்டாவை எப்படி கணினியுடன் கனெக்ட் செய்து பயன்படுத்துவது என்பதை இந்த லிங்கில் உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.how to connect your mobile with PC through hotspot or Wi-Fi
Thanks with Ramji.
Comments
Post a Comment
Thanks for the visit!