TWO ICT TLM ENOUGH FOR ALL TEACHERS


வணக்கம் தோழர்களே!
நவீன தகவல் தொழில்நுட்ப காலத்தில் ஒரு ஆசிரியருக்கு தேவையான
அடிப்படை கற்றல் துணைக் கருவிகளை பற்றி இங்கு காண்போம். கற்றல்-கற்பித்தல்
நிகழ்வு அடுத்த தளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற காலகட்டத்தில்
ஒவ்வொரு ஆசிரியரும் கட்டாயம் காலத்திற்கேற்ப நாமும் இந்த ICT அதாவது தகவல்
தொழில்நுட்ப கருவிகளை கற்றல் கற்பித்தலில் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில்
உள்ளோம் .காலத்தின் எதிர்பார்ப்புகளும் அதுதான்.

1. WIFI POCKET PROJECTOR


வாருங்கள் சுமார் 2 லட்சத்தில் இருந்து 3 லட்சம் வரை செலவு செய்து உருவாக்கவேண்டிய ஸ்மார்ட் வகுப்பறையை(SMART CLASS) நாம் வெறும் 15 முதல் 20 ஆயிரத்திற்குள் உருவாக்கிவிட முடியும் மேலும் அதைவிட சிறப்பு என்னவெனில் இதை நாம் நினைக்கும் இடத்திற்கெல்லாம் பாக்கெட்டிலேயே எடுத்துச் செல்ல முடியும் வாருங்கள் ஒவ்வொன்றாகப் பார்ப்போம் முதலில் இந்த வைபை (wifi) பாக்கெட் ப்ரொஜெக்டர் பற்றி சில வார்த்தைகள்....




இந்த மாதிரியான ப்ரொஜெக்டர்கள் தற்பொழுது அமேசான், ஃப்ளிப்கார்ட், அலி எக்ஸ்பிரஸ், ஸ்னாப்டீல் இது போன்ற ஆன்லைன் வர்த்தக மையங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இதனுடைய சிறப்பு என்னவெனில் இதனுடைய அளவு நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு கைபேசி அளவு தான் உள்ளது ஆனால் இந்த wifi pocket projector   இல் நம் மொபைலில் வைத்திருக்கும் அனைத்தையும் இதனோடு கனெக்ட் செய்து நாம் செல்லும் பள்ளி வகுப்பறையிலேயே ஒரு சாதாரண வெள்ளை அடிக்கப்பட்ட சுண்ணாம்புச்  சுவற்றில் இதை  ஒளிபரப்பி காண்பிக்க முடியும்.
Wi-fi மூலம் எந்தவித ஒயரும் (CABLE) இல்லாமல் இணைக்க முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.



நீங்கள் மொபைல் மூலம் பிரவுஸ் செய்து பார்க்கும் அனைத்து விதமான
டாக்குமெண்ட், பிடிஎப் பைல்களை, வீடியோக்களை, ஆடியோகளையும் இதில்
இணைத்து காட்ட முடியும் உங்கள் பாடம் சார்ந்த ஸ்டடி மெட்டீரியல்களை
மெமரி கார்டு மூலமாக இதில் இணைக்க முடியும்.
இதில் மேலும் பல விதமான சிறப்பு அம்சங்கள் உள்ளது அதை இந்த படத்தில்
பார்த்து தெரிந்து கொள்ளவும். எனவே தற்போது உள்ள ஒரு ஆசிரியருக்கு மிக
முக்கியமாக இது மாதிரியான ஒரு பாக்கெட் பிராஜக்டர் அவசியம் இது இருந்தால்
அவர் வேறு எந்த கற்றல் உபகரண பொருட்களையும் உபயோகிக்க வேண்டிய
அவசியம் இருக்காது அனைத்தையும் இதன் மூலமே உபயோகப்படுத்திக்
கொள்ளலாம்.



2. BLUETOOTH SPEAKERS FOR TEACHERS

இரண்டாவதாக நீங்கள் இருக்கும் வகுப்பறை மாணவர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் போது பெரிதாக இருந்தால் உங்களுக்கு கட்டாயம் ஒரு ப்ளூடூத் மூலம் இயங்கும் ஸ்பீக்கர் அவசியம் தேவை.
    அப்பொழுது தான் அனைத்து மாணவர்களுக்கும் அந்த ஆடியோ சத்தம் சென்று சேரும் அந்த வகையில் தற்போது இந்த ப்ளூடூத் ஸ்பீக்கர் சாதாரண கடைகளில் கிடைக்கின்றன நீங்கள் ஆன்லைன் மூலமாகவும் வாங்கிக்கொள்ளலாம்.நான் உங்களுக்கு இங்கே சில வாங்கும் லிங்க் இணைப்புகளை கொடுத்துள்ளோம். தேவைப்பட்டால் நீங்கள் அங்கு சென்று உங்களுக்கு தேவையானதை தேர்ந்தெடுத்து வாங்கிக்கொள்ளலாம்.



இந்த ப்ளூடூத் ஸ்பீக்கர்யும் நீங்கள் நான் மேலே குறிப்பிட்ட அந்த WIFI பாக்கெட்டு
ப்ரொஜெக்டர் உடன் இணைத்துக்கொள்ள முடியும். இது இரண்டும் ஒரு ஆசிரியர்
கையில் இருந்தால் அவர்கள் கையில் ஒரு ஸ்மார்ட் வகுப்பறையை உள்ளது
என்பதில் சந்தேகமில்லை. இதுபோன்ற மேலும் பயனுள்ள தகவல்களுடன் விரைவில்
சந்திக்கிறேன்.

இராம்ஜி (எ) இராமானுஜம்,
அரசு பள்ளி ஆசிரியர் தானிப்பாடி,
திருவண்ணாமலை மாவட்டம் .

உங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன....!







Comments